Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Saturday 30 December 2017

அரசியலில் களமிறங்கும் ரஜினிகாந்த்?


டிசம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அவரது ரசிகர்களின் 23 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது, அறிவிப்பு வந்தவுடன் அவரது ரசிகர்கள் இனிப்பு கொடுத்து பட்டாசு வெடித்து கொண்டாட துவங்கிவிட்டனர். எந்த ஒரு கட்சியோடும் இணையாமல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை துவங்கி  234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம் என்ற முடிவை ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ள ரஜினிகாந்த் இப்போது அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் அதை விமர்சிக்க எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். 

அரசியலுக்கு வருவதென்றால் வெற்றி பெற வேண்டும், வீரமும் விவேகமும் வேண்டும் என்று சொல்லி வந்த ரஜினிகாந்த்,  இந்த ஆண்டு அவரது இரண்டு திரைப்படங்கள் வெளிவர தயாராகி கொண்டிருக்கும் நிலையில் மிக கவனமாக எந்த கட்சியையும் நேரடியாக தாக்காமல் பொதுவாக இன்றைய அரசியல் குறித்த தன் பார்வையை தெளிவுபடுத்தி இருப்பதன் மூலம் வீரத்தோடு விவேகமாகவும் தன் முதல் அடியை ரஜினிகாந்த் அரசியலில் எடுத்து வைத்துள்ளார். தமிழக அரசியலில் இதுவரை ஆட்சியில் இருந்த இரண்டு திராவிட கட்சிகளின் பெரும் தலைவர்களில் ஒருவர் மறைந்து விட்டார், இன்னொருவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த்த்தின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. அவர் அரசியலில் களமிறங்கும் அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே அந்த அறிவிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்களிடம் இருந்து அறிக்கைகளும், பேட்டிகளும் வர துவங்கிவிட்டது. 

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் கமல்ஹாசனின் ட்வீட்


கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தமிழக அரசியலில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து தன் வேதனையை தெரிவித்துள்ள ரஜினிகாந்த், சிஸ்டத்தை சரி செய்வதற்கு தயாராகி விட்டார் என்று தெரிகிறது, அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள், ஆட்சிக்கு வரும் கட்சிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று கவலைபட்டிருக்கும் ரஜினிகாந்த் கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டுமென்றால் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மக்களும்  ஒத்துழைக்க வேண்டும் என்பது ரஜினிகாந்துக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் மக்கள் ஒரு கட்சி வேட்பாளருக்கு ஒட்டு போட வேண்டுமென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் தங்கள் தொகுதிக்கு என்ன நன்மை செய்வார், மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பாரா? தீர்வு காண்பாரா? என்றெல்லாம் சிந்தித்து ஒட்டு போடுவதில்லை மாறாக ஒட்டு போடுவதற்கு எந்த கட்சி வேட்பாளர் எவ்வளவு கொடுப்பார் என்று எதிர்பார்க்கும் கேவலமான சூழ்நிலை உருவாகியுள்ளது அல்லது அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு விட்டது. மக்களும் ஊழலுக்கு பழக்கப்பட்டு போய் விட்டனர், பணம் கொடுத்தால் தான் வாக்குச்சாவடிக்கு மக்கள் ஒட்டு போட வருவார்கள் என்ற அவல நிலை வந்துவிட்டது, நேர்மையாக அரசியல் செய்ய விரும்பிய ஒரு சில அரசியல் தலைவர்கள் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், தன்னுடைய மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு என்று தெரிவித்துள்ள ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்கள் வரவேற்பார்களா? அவர் கொண்டு வர விரும்பும் அரசியல் மாற்றத்தை மக்களும் விரும்புவர்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...  
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 21 December 2017

அமெரிக்காவில் விமர்சிக்கப்படும் டிஸ்னி தயாரித்த டிரம்ப் ரோபோ


சிறுவர்களுக்கான கார்ட்டூன் திரைப்படங்கள், சீரியல்கள் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி அமெரிக்க அதிபர்களின் உருவங்களை ஆடியோ அனிமேட்ரானிக்ஸ் முறையில் செய்து அவற்றை மக்கள் பார்வைக்கு ஹால் ஆஃப் பிரெஸிடெண்ட்ஸ் என்ற மேடை அரங்கில் மேஜிக் கிங்டம் என்ற டிஸ்னி வேல்ட் ரிசார்ட்டில் வெளியிடுவது வழக்கம், இரண்டு நாட்கள் முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருவ ரோபோ ஒன்று மேடையில் பேசுவது போன்ற காட்சியை வெளியிட்டுள்ள டிஸ்னி நிறுவனம், அந்த ரோபோவின் உருவம் மற்றும் வடிவமைப்பால் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது.



இந்த ரோபோவை பார்த்துவிட்டு ஒருவர் டிவிட்டரில்  "இந்த ரோபோவை செய்ய தொடங்கும்போது முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டனை மனதில் கொண்டு உருவாக்க தொடங்கி பின்னர் முடிக்கும் போது டிரம்ப் போல் உருவாக்கி உள்ளனர்" என்று கூறியிருக்கிறார். 

இன்னொருவர் "ஹால் ஆஃப் பிரெஸிடெண்ட்ஸில் இருப்பதிலேயே ஒல்லியான உருவத்தில் இருப்பவர் டிரம்ப் தான் ஆனால் இதை போல் டிரம்ப் ஒருபோதும்  ஒல்லியாக இருந்ததில்லை, இதை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது" என்றிருக்கிறார். 

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி போல், ஹாலிவுட்டில்  மிசஸ் டவுட்ஃபயர் என்ற படம் வெளிவந்தது, அந்த படத்தின் நாயகன் உருவம் போலவே டிரம்ப்பின் உருவத்தை செய்து விட்டனர் என்று ஒருவர் கூறியுள்ளார். இதே போன்று மேலும் பலரும் பல்வேறு பிரபலங்களை போல் இந்த உருவம் காட்சியளிப்பதாக கூறியுள்ளனர்.

இதற்கு முன்பு பல அமெரிக்க அதிபர்களின் உருவங்களை வெற்றிகரமாக செய்து பாராட்டு பெற்ற டிஸ்னி நிறுவனம் டிரம்ப் உருவத்தை செய்வதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம். 

Wednesday 13 December 2017

தெரு நாய்களின் நன்றி உணர்ச்சி


நாய் என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் நன்றி காட்டும் குணம் தான். மனிதர்கள் பலரிடம் இன்று அன்பும், மனிதத்தன்மையும், நன்றி உணர்ச்சியும் வெகுவாக குறைந்து கொண்டே வரும் இந்த காலத்தில் இந்த நான்கு கால் ஜீவன்களின் நன்றி உணர்ச்சி வியக்க வைக்கிறது.

நான் அப்போது வீட்டை விட்டு தனியாக பேச்சிலர் ஹாஸ்டலில் தங்கியிருந்த நாட்கள், அங்கு நாய் வளர்க்க அனுமதி கிடையாது, ஹாஸ்டலில் இருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தேன், எங்கள் ஹாஸ்டல் இருக்கும் தெருவில் கும்பலாக எட்டிலிருந்து பத்து நாய்கள் சேர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும். எப்போதாவது   வேலை    விட்டு    திரும்பும்போது     எனக்கு பசித்தால் பிஸ்கட் பாக்கெட் வாங்கி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே ஹாஸ்டலுக்கு திரும்புவேன், ஒரு சில பிஸ்கட் துண்டுகளை எங்கள் தெருவில் இருக்கும் நாய்கள் கும்பலுக்கும் போடுவது உண்டு. இந்த தெரு நாய் கும்பல்களிடம் உள்ள ஒரு குணம் இன்னொரு தெருவை சேர்ந்த நாய் தன் எல்லைக்குள் (தெருவுக்குள்) வந்துவிட்டால் கும்பலாக கூடி குரைத்து அந்த நாயை விரட்டுவது தான்.



அந்நாட்களில். எதிர்பாராத ஒரு விபத்தை சந்தித்ததால் கை கால்களில் கட்டுகளுடன் பேருந்தில் வேலைக்கு சென்று திரும்பி கொண்டிருந்தேன், ஒரு நாள் மருத்துவமனைக்கு சென்று கட்டுகளை மாற்றி விட்டு மீண்டும் ஹாஸ்டலுக்கு பேருந்தில் வந்து இறங்கினேன்,  பேருந்து நிறுத்தம் எங்கள் ஹாஸ்டல் இருக்கும் தெருவிலிருந்து மூன்று தெரு தள்ளி இருந்தது, அங்கிருந்து எங்கள் தெருவுக்கு நடந்து செல்ல வேண்டும், பேருந்திலிருந்து கட்டுகளோடு இறங்கியவுடன் அந்த தெருவில் இருந்த நாய்கள் (கட்டுகளோடு  இருந்த) என் வித்தியாசமான தோற்றத்தை கண்டு சூழ்ந்து  குரைத்து கொண்டு என் மேல் பாய தொடங்கின பயத்தில் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ஆனால் வினாடி நேரத்தில் காட்சி மாறியது குரைப்பு சத்தம் கேட்டு எங்கிருந்தோ ஓடி வந்த எங்கள் தெருவை சேர்ந்த நாய் கும்பல் என்னை சூழ்ந்து பாதுகாப்பு வளையம் போல் நின்றன, என்னை கடிக்க வந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த நாய்கள் சிதறி ஓடின. பேருந்து நிறுத்தத்தில் இருந்து எங்கள் ஹாஸ்டல் வரை என்னை (பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டு) விட்டுவிட்டு தான் திரும்பின. 

கொஞ்சம் யோசித்து பார்த்தால் நான் எங்கள் தெருவை சேர்ந்த அந்த நாய் கும்பலுக்கு எப்போதோ சில முறை பிஸ்கட்டுகள் போட்டிருக்கிறேன், அவ்வளவு தான், ஆனால் அதை நினைவில் வைத்து கொண்டு ஆபத்தான நேரத்தில் எனக்கு உதவிய இந்த தெரு நாய்களின் அன்பும், நன்றி உணர்ச்சியும் வியக்க வைக்கிறது. 

Wednesday 6 December 2017

எளிமையான முறையில் நடைபெற்ற ஒரு அரசியல்வாதி மகனின் திருமணம்


ந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் மந்திரியின் மகனுக்கு திருமணம் என்றால் அதற்கு எவ்வளவு பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடக்கும். ஆனால், பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வகிக்கும் சுஷில்குமார் மோடியின் மூத்த மகன் உத்கர்ஷ் அவர்களின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. 

மணமகன் உத்கர்ஷ் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், மணமகள் யாமினி கொல்கத்தாவை சேர்ந்த பட்டய கணக்காளர்.  பீகாரில் உள்ள கால்நடை மருத்துவகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் விருந்தினர்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சிக்கு பதில் வரதட்சணை ஒழிப்பு பிரசார பாடல்கள் பாடப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கள் திருமணத்திற்க்கு அல்லது தங்கள் மகன்/மகள் திருமணத்திற்காக வரதட்சணை கேட்கவும், கொடுக்கவும் மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.    



விருந்தினர்களுக்கு பெரும் உணவு விருந்துக்கு பதில் உடல் உறுப்பு தானம் செய்யும் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உடல் உறுப்பு தானத்துக்காக பதிவு செய்யும் கவுன்டர்கள் திறக்கபட்டிருந்தது. திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களில் 150 க்கும் மேற்பட்டோர் இறப்புக்கு பின் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு இந்த கவுன்டர்களில் பதிவு செய்து கொண்டனர்.   


பெரும் உணவு விருந்து இல்லாவிட்டாலும் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு நான்கு லட்டுகள் அடங்கிய பாக்கெட்டும், சூடான தேநீரும் வழங்கப்பட்டது. லட்டுகள் அடங்கிய பாக்கெட்டில் சாப்பிட்ட பின் பாக்கெட்டை குப்பை தொட்டியில் போட சொல்லும் "ஸ்வச் பாரத்" வாசகங்கள் பிரிண்ட் செய்யபட்டிருந்தது. 

ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் : இது போன்ற வரதட்சணை வாங்காத எளிய முறையில் நடக்கும் திருமணங்கள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், இதை போன்ற எளிய முறையில் திருமணங்கள் இனி ஹரியானாவிலும் நடத்த அரசு உதவும் என்று கூறியுள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அமைதியான முறையில் நடந்த இந்த திருமணத்தை  வரவேற்றுள்ளார், (திருமணம் என்றாலே பாண்ட் வாத்தியங்களின் சத்தத்தால் காது செவிடாகி விடும் அனால் இந்த திருமணம் அந்த சத்தமில்லாமல் அமைதியாக நடைபெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்)

திருமணம் முடிந்த பிறகு சுஷில்குமார் மோடி திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களிடம் பெரும் ஆடம்பர செலவு வைக்காத, இதை போன்ற வரதட்சணை வாங்காத, எளிமையான திருமணங்களை நடத்த சொல்லி  வேண்டுகோள் வைத்தார். 

Sunday 3 December 2017

கலையழகு மிளிரும் பகுதியாக மாறிய மீன் சந்தை

மும்பை நகரத்தில் உள்ள  142 வருட பழமையான, மிக பிரபலமான மீன்கள் விற்கும் சந்தை பகுதி  சாசூன் டாக். இந்த பகுதிக்கு இப்போது கலை ஆர்வம் கொண்ட மக்கள் படையெடுத்து கொண்டிருக்கிறார்கள். கொல்லன் பட்டறையில் ஈக்களுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? மீன்கள் வாசம் வீசும் இந்த பகுதியில் இப்போது தெரு ஓவியங்களால் பெயிண்ட் வாசம் வீச துவங்கி இருக்கிறது.  காலரிகளிலும், அருங்காட்சியகங்களிலும் அடைந்து கிடக்கும் கலை படைப்புகளை, கலை பற்றி ஒன்றுமே தெரியாத சாதாரண மக்களும் புரிந்து ரசிக்கும் வகையில் அவர்களும் கலை படைப்புகளை ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நடத்தப்பட்டு வரும் ஸ்டார்ட் இந்தியா (St+Art India) நிறுவனம் சாசூன் டாக்கை தங்கள் கைவண்ணத்தால் கலையழகு மிளிரும் சொர்க்கமாக மாற்றி இருக்கின்றனர். 



பெரும் கட்டிடங்களின் சுவர்களே இவர்களது ஓவியம் வரையும் களமாக உள்ளது.  ஓவியங்கள் மூலமாக மக்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உணர்த்தும் விதத்தில் பிளாஸ்டிக் பெருங்கடல் என்ற கலைப்படைப்பை சிங்கப்பூரை சேர்ந்த டான் சிசி என்ற படைப்பாளி உருவாக்கியுள்ளார்.  இந்த கலைப்படைப்பை பார்க்கும்போதே நாம் பிளாஸ்டிக் குப்பை கடலில் மிதப்பது போன்ற உணர்வை தருகிறது. நாம் தினசரி வாழ்கையில் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகளான வாட்டர் பாட்டில், தேங்காய் எண்ணெய் குப்பி, உணவு பார்சல் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் என்று இந்த பிளாஸ்டிக் குப்பைகளுக்கு நுகர்வோராகிய நாமும் காரணம் என்று முகத்திலறைவது போல் சொல்கிறது இவரது படைப்பு. 



இதுவரை டில்லி, பெங்களுரு, ஹைதராபாத், கொல்கத்தா நகரங்களில் ஆறு முறை இது போன்ற கண்காட்சிகளை நடத்தி இருக்கும் இந்த நிறுவனம் இதற்கு முன்பு பெங்களூரில் நடந்த கண்காட்சியில் பெங்களுரு நகரத்தின் ட்ராபிக் காரணமாக மிக மெதுவாக நகரும் வாகனங்களை குறிப்பதற்கு அந்த நகரமெங்கும் பேப்பர் நத்தைகளை வரைந்து வைத்து அந்த நகர மக்களை 
கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.



உலகம் முழுவதிலும் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டு தங்கள் கலை படைப்புகளை ஐம்பது நாட்களுக்கு நடத்தப்பட இருக்கும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பார்வையிடலாம்.  
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 23 November 2017

வாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ

டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்களையும் பார்க்கும் போது வேதனை தருவதாக இருக்கும். ஆனால், உடல் ஊனமுற்றவர்கள் பெரும்பாலும் தங்கள் உடல் ஊனத்தை ஒரு பொருட்டாகவே  நினைக்காமல் வாழ்கையில் முன்னேறி வருகின்றனர். அவர்களை கேலியாக பார்க்கும் இந்த சமூகம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இவர்கள் வாழ்க்கை இருக்கிறது. 



சீனாவை சேர்ந்த யாங் லீக்கு 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் மறக்க முடியாத கருப்பு தினமாக மாறி போனது, அப்போது அவளுக்கு முன்று வயது தான், தன் வயதையொத்த சிறு பிள்ளைகளோடு விளையாடி கொண்டிருந்தபோது, தெரியாமல் அங்கிருந்த ஹை வோல்டேஜ் மின்சார ஒயரை தொட்டதால் அடித்த ஷாக்கில் தூக்கி எறியபட்டாள், உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டதால் உயிர் பிழைத்து கொண்டாலும் மின்சாரம் பாய்ந்த கரங்கள் இரண்டையும் அறுவை சிகிச்சை செய்து வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

                     


இரண்டு கரங்களையும் இழந்து நின்ற யாங் லீயை பார்த்து அவரது குடும்பமும் சொந்தங்களும் மனமொடிந்து கண்ணீர் சிந்தினாலும், யாங் லீ சிறிதும் நம்பிக்கை இழக்கவில்லை, அவள் வளர வளர அவள் நம்பிக்கையும் வளர்ந்தது, மிகவும் கஷ்டப்பட்டு பள்ளி படிப்பை முடித்த யாங் லீ கடந்த 2007 ஆம் ஆண்டு சீனாவின் புகழ்பெற்ற அன்ஹுயி விவசாய கல்லூரியில் 514 புள்ளிகளுடன் சேர்ந்துள்ளார், இப்போது கல்லூரி படிப்பையும் முடித்து பட்டம் பெற்று ஒரு கிளெர்க்காக வேலை பார்த்து வருகிறார். 



தன் வாழ்க்கையில் நடந்தவற்றையும் தினசரி வாழ்க்கை முறையையும் யாங் லீ சமூக ஊடகங்களில் நேரடி காணொளி காட்சிகளாக பகிர தொடங்கிய பின்பு யாங் லீயின் வாழ்க்கை வெளி உலகுக்கு தெரிய வந்தது, இப்போது சமூக ஊடகங்கள் மூலமாக இவருக்கு 900,000 பேர் ரசிகர்களாக மாறியுள்ளனர்.




"உடல் ஊனமுற்ற மனிதர்களின் வாழ்க்கை மிகவும் சாதாரணமானதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்தாலும் எனக்கு சமூக ஊடகங்களில் நேரலை காணொளி காட்சி பகிர்வதன் மூலமாக நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்" என்கிறார் யாங் லீ.   இவரை போன்று ஊனமுற்ற மக்கள் பலரின் உள்ளங்களில் யாங் லீயின் வாழ்க்கை நம்பிக்கை விளக்கேற்றுவதாக உள்ளது.  
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 15 November 2017

இனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்

டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா? புவியியல் சார்ந்த குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். நம் நாட்டில் தயாரிக்கப்படும் எல்லா பொருட்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த செப்டம்பர் மாதம், 2015ஆம் ஆண்டில்,  சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில் மேற்கு வங்க அரசின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் தோட்டக்கலை துறையினர் சார்பில் ரசகுல்லா தங்கள் மாநில தயாரிப்பு என்று அங்கீகாரம் (புவிசார் குறியீடு) தர சொல்லி விண்ணப்பம் செய்தனர். மேற்கு வங்க அரசு ரசகுல்லா 1868 ஆம் ஆண்டில் தங்கள் மாநிலத்தை சேர்ந்த இனிப்பு பண்டங்கள் தயாரிப்பாளரான  நபின் சந்திர தாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்ட இனிப்பு பண்டம் என்று ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெற உரிமை கோரி இருந்தது. ஓடிஷா மாநிலமும் ரசகுல்லா தங்கள் மாநில தயாரிப்பு என்று இடையில் போட்டிக்கு வந்தது. 

இரண்டு மாநிலங்களின் விண்ணப்பங்களையும் பரிசீலித்ததில் இறுதியில் மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வந்ததும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது எங்கள் எல்லோருக்கும் இனிப்பான செய்தி, ரசகுல்லாவுக்கு மேற்கு வங்க மாநில தயாரிப்பு என்று புவிசார் குறியீடு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது என்று டிவிட்டரில் ட்வீட் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

பார்த்தாலே நாவில் நீர் ஊற வைக்கும் ரசகுல்லா எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
 ரசகுல்லா செய்முறை


ரசகுல்லா செய்முறை காணொளி காட்சி - நன்றி :  தமிழ் கிச்சன்
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 7 November 2017

பயணியை கீழே தள்ளி தாக்கிய விமான நிறுவன பணியாளர்கள்








பேருந்தில் கூட்டம் அலைமோதும்போது உள்ளே போக சொல்லி படியில் நிற்பவர்களை நடத்துனர் பிடித்து பேருந்துக்குள் தள்ளி விடும் சம்பவங்களை பார்த்திருப்போம், ஆனால் விமான நிலையத்தில் விமானத்துக்கு பயணிகளை அழைத்து கொண்டு செல்லும் பேருந்தில் பயணி ஒருவரை ஏற விடாமல் பணியாளர்கள் கீழே தள்ளி விட்ட சம்பவம் நடந்துள்ளது. டில்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவன பணியாளர் ஒருவர் விமான பயணியை தாக்கி கீழே தள்ளி கழுத்தை நெரித்த சம்பவம் குறித்த காணொளி காட்சி நேற்று வெளியாகி வைரல் ஆக துவங்கியுள்ளது. 


இண்டிகோ விமான நிறுவன பணியாளரால் தாக்கப்பட்ட பயணியின் பெயர் ராஜீவ் கத்தியால் என்று தெரிய வந்துள்ளது, செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் "டில்லி விமான நிலையத்தில் காத்து கொண்டிருந்தபோது இண்டிகோ விமான நிறுவன பணியாளர்கள் என்னிடம் அநாகரிமாக நடந்து கொண்டனர், ஏற்கெனவே இரண்டு பேருந்துகள் விமானம் புறப்படுமிடத்திற்கு பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற நிலையில் மூன்றாவது பேருந்துக்காக நாங்கள் காத்து கொண்டிருந்தோம், மூன்றாவது பேருந்துக்கு ஏற்பாடு செய்யவில்லையா? எப்போது வரும்? என்று அங்கிருந்த பணியாளரிடம் கேட்டேன், அப்போது அங்கு வந்த மூன்றாவது பேருந்தில் ஏற முயன்ற போது என்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பணியாளர் பேருந்தில் ஏற விடாமல் என்னை தடுத்ததுடன், அவருடன் இருந்த இன்னொரு பணியாளர் இவனுக்கு இன்று நல்ல பாடம் கற்பிப்போம் என்று சொல்லி என்னை பிடித்து கீழே தள்ளி விட்டார்" என்று கூறியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் "இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணியிடம் தனிப்பட்ட முறையில் விமான நிறுவனத்தின் சார்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இண்டிகோ விமான நிறுவன தலைவர் ஆதித்யா கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் டில்லி விமான நிலையத்தில் பயணிக்கு எங்கள் விமான நிறுவன பணியாளரோடு ஏற்பட்ட இந்த மோசமான அனுபவத்திற்காக நான் வருந்துகிறேன்.  பாதிக்கப்பட்ட பயணியிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுள்ளேன், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதோடு விமான நிறுவனத்தின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மீண்டும் பாதிக்கப்பட்ட பயணியிடம் இந்த அறிக்கை மூலம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கிறேன்" என்று கூறியுள்ளார். 
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 6 November 2017

சுற்றுலா தளமாகும் பாகுபலி படப்பிடிப்பு தளம்

மாலய வசூல் சாதனை செய்த பாகுபலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த இடங்கள் இப்போது மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளங்களாக மாறி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த கேரளாவிலுள்ள அத்திரப்பள்ளி அருவிக்கு மக்கள் அதிக அளவில் வர துவங்கியுள்ளனர். அந்த அருவி இப்போது நட்சத்திர அந்தஸ்து பெற்ற அருவியாகி விட்டது. 

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பாகுபலி படத்தின் பல காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட நூறு ஏக்கர் பரப்பளவில் இந்த திரைப்படத்தின் செட்டுகள்  அமைக்கப்பட்டுள்ளது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டி ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்போது இந்த பிரமிக்க வைக்கும் செட்டுகள் மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. 


கிட்டத்தட்ட அறுபது கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த செட்டுகளில் கலை நுணுக்கத்தோடு வரையப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு பிரம்மாண்டமான செட்களை வடிவமைத்து நம் கண்களுக்கு திரைபடத்தின் மூலம் விருந்தளித்த பெருமை கலை இயக்குனர் சாபு சிரிலையே சேரும்.


திரைப்படத்தில் பார்த்த மகிழ்மதி சாம்ராஜ்யத்தை நேரில் பார்ப்பதற்கு இரண்டு வகை கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளது. சாதாரண கட்டணம் ரூபாய் 1250 - (காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை) என்றும் ப்ரீமியம் கட்டணம் ரூபாய் 2349 (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும். 
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 5 November 2017

அமெரிக்க அதிபரின் ஆசிய சுற்று பயணம்



அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்பு முதல்முறையாக ஆசிய நாடுகளுக்கு 12 நாள் நீண்ட  அரசு முறை சுற்று பயணத்தை இந்த மாதத்தில் துவங்கி இருக்கிறார் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம்,  பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்யும் வகையில் அவருடைய சுற்றுபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்க அதிபராய் இருந்த ஜார்ஜ் புஷ் 1992 ஆம் ஆண்டு இதே போன்று நீண்ட ஆசிய சுற்றுபயணத்தை  மேற்கொண்டார். அதன் பின்பு இத்தகைய நீண்ட சுற்றுபயணத்தை இப்போது அமெரிக்க அதிபராய் உள்ள டொனால்ட் டிரம்ப் துவங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

(நவம்பர் 5 - 6) இந்த ஆசிய சுற்றுபயணத்தின் போது ஜப்பான் நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்றிருக்கும் ஷின்ஷோ அபேயை சந்திக்கும் டிரம்ப் அவருடன் வட கொரியாவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து விவாதிக்க கூடும் என்று தெரிகிறது. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையில் இரண்டு ஏவுகணைகள் ஜப்பான் வான் எல்லையின் மேல் பறந்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பயணத்தில் கோல்ப் விளையாட்டு வீரரான ஹிதேகி மட்சுயோமாவையும் பிரபல பாப் இசை பாடகரான பிகொடாரோவையும்  ட்ரம்ப்  சந்திக்க இருக்கிறார். 

(நவம்பர் 7) தென் கொரியா அதிபராய் இருக்கும் மூன் ஜே-விற்கு டிரம்ப் மற்றும் ஷின்ஷோ அபேவுடன்  வட கொரியா விவகாரத்தில் சில கருத்து வேறுபாடுகள் உண்டு, மூன் ஜே வட கொரியாவுடன்  பேச்சுவார்த்தைகள் நடத்தி அதன் மூலமாக சுமுக தீர்வை அடைய விரும்புகிறார், ஆகவே தென் கொரிய அதிபரை சந்திக்கும் போது வட கொரியா விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விளக்க வாய்ப்பு இருக்கிறது. 

(நவம்பர் 8 - 9) டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பின்பு சீனாவுடன் சுமூகமான உறவு நீடித்து வருகிறது, சீன அதிபரான சி ஜின்பிங்யை  சந்திக்கும்போது சீனாவின் எல்லைபுற வழியாக வட கொரியா நடத்தி வரும் ரகசிய வர்த்தகங்களை தடுக்க நடவடிக்கைகளை தீவிரபடுத்தும்படி வலியுறுத்த வாய்ப்புள்ளது. வட கொரியாவின் 90 சதவிகித வர்த்தகம் சீன எல்லையின் வழியாகவே நடைபெற்று வருகிறது.   சீனாவின் துணையில்லாமல் வட கொரியாவால் வெற்றிகரமாக வர்த்தகம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவுடன் சீனா சில வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது.

(நவம்பர் 10 - 11) வியட்நாம் நாட்டின் தலைநகரில் நடக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளார், புடினுடன் டிரம்ப் சிரியா, உக்ரைன் மற்றும் வட கொரியா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

(நவம்பர் 12) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டரேட்டை சந்திக்கும் டிரம்ப் அங்கே அவருடன் ஆசியான் (ASEAN) அமைப்பில் உள்ள பல நாடுகளின் அதிபர்களையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் டுட்டரேட் அந்த நாட்டில் பெரும் தலைவலியாய் இருந்து வந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுத்து அமெரிக்க அதிபரின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க அதிபரின் இந்த நீண்ட ஆசிய சுற்றுப்பயண திட்டத்தில் இந்தியா இடம் பெறவில்லை என்ற போதிலும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நடைபெறும் வாய்ப்பு உள்ளது. 
சென்ற வார உலகம் படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள் --------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 30 October 2017

சீனாவில் வளர்ந்த ராட்சத யானை பாதம்

சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள டெங்சோங் நகரில் வசிக்கும் 81 வயது முதியவர் தனது வீட்டு தோட்டத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியன்று சிறிய காளான் செடி ஒன்று முளை விட தொடங்கியதை கண்டுள்ளார். அடுத்த மூன்றே நாட்களில் இந்த காளான் செடி நாற்பது செ.மீ அகலமும்  84 செ.மீ உயரமுமுள்ள ராட்சத காளானாக (கிட்டத்தட்ட இரண்டு வயதுள்ள சிறு பிள்ளையின் உயரம்) வளர்ந்து அப்பகுதியில் வாழும் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் ராட்சத உருவத்தினால் ஒரே நாள் இரவில் அப்பகுதி வாழ் மக்களிடம் பிரபலமடைந்துவிட்டது.



இந்த காளானை பார்க்க வரும் பலர் இது உண்ணகூடிய விஷத்தன்மை இல்லாத காளானா? என்று கேட்கின்றனர், இது பற்றி சரியாக தெரியாததால் இந்த காளானை பறித்து யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.

மக்கள் இந்த காளான் செடிக்கு அதன் வடிவத்தை பார்த்து பிரமித்து யானை பாதம் என்று பெயரிட்டுள்ளனர். இப்போது தினமும் ஆயிரகணக்கான மக்கள் இந்த காளான் செடியை காண வருகின்றனர், இந்த காளான் செடியால் இப்போது இந்த இடம் ஒரு சுற்றுலா தளம் போல் ஆகிவிட்டது.




இந்த செடியிடம் வேண்டுதல் வைத்தால் உடனே நடப்பதாக யாரோ கிளப்பி விட (ஊருக்கு ஒருத்தன் இதுக்காக இருப்பான் போல) கிராம மக்கள் சிலர் இந்த செடியிடம் வேண்டுதல்கள் எல்லாம் வைக்க தொடங்கியுள்ளனர்.

சீன அறிவியல் ஆராய்ச்சி அகடெமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இது ட்ரைக்ளோமா வகை காளான் என்றும் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரகூடிய பூஞ்சை காளான் என்றும் அறிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 29 October 2017

சோபியா - பேசும் ரோபோ


தயமும் மூளையும் இல்லாத ஒருவருக்கு சவுதி அரேபிய அரசு அந்த நாட்டின் குடியுரிமை வழங்கி உள்ளது. அந்த நாட்டு அரசாங்கத்தின் உத்தரவுபடி அக்டோபர் 25, 2017 முதல் சோபியா சவுதி அரேபிய நாட்டின் முதல் ரோபோ பிரஜை. ஆம், ஹன்சன் ரோபோடிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் டேவிட் ஹன்சன் என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரால் தயாரிக்கப்பட்ட ரோபோ தான் சோபியா.



சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளது இந்த சோபியா ரோபோ. பிரபலங்களிடம் மேடையில் பேட்டி காண்பது போல் ஒருவர் கேள்விகளை கேட்க யார் உதவியும் இல்லாமல் தானாக பதில்களை கூறியுள்ளது சோபியா ரோபோ. இந்த முறை சோபியா ரோபோ மக்களுடன் சமாதானத்தோடு வாழ்வது பற்றி பேசியுள்ளது. (இதற்கு முன்பு ஒரு முறை பேசிய போது மனித குலத்தை அழித்து விட போவதாக இதே ரோபோ பேசி அதிர்ச்சியில் ஆழ்த்தியது)

ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ப்ரோஃபஸர் ஐன்ஸ்டீன் என்ற 14 இன்ச் உயரமுள்ள சிறிய ரோபோ, ஐம்பதுக்கும் மேற்பட்ட முக பாவனைகளை வெளிபடுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மனிதர்களுக்கு உதவும் (பெர்சனல் செகரெட்டரி போன்று) விதத்தில் வடிவமைக்கபட்டது. இந்த ரோபோவிடம் வானிலை, ட்ராபிக், போன்ற தகவல்களை கேட்டு பதில் பெற முடியும். 

 ப்ரோஃபஸர் ஐன்ஸ்டீன் ரோபோ அறிமுகம்

இப்போது தயாரிக்கப்பட்டுள்ள சோபியா ரோபோவால் சோகம், மகிழ்ச்சி, கோபம் உட்பட பல உணர்ச்சிகளை முக பாவனைகள் மூலம் வெளிபடுத்த முடியும், இந்த ரோபோ குட் மார்னிங் பிரிட்டன், தி டுநைட் ஷோ உட்பட சில நிகழ்சிகளில் கலந்து கொண்டு பேட்டி அளித்துள்ளது. ஆட்ரீ ஹபர்ன் என்ற பிரிட்டிஷ் நடிகையின் முக சாயலில் சோபியா ரோபோ வடிவமைக்க பட்டுள்ளது.

குட் மார்னிங் பிரிட்டன் நிகழ்ச்சியில் சோபியாவின் பேட்டி 

தி டுநைட் ஷோ நிகழ்ச்சியில் சோபியா ரோபோவின் பேட்டி


முன்பு மனித குலத்தை அழித்து விட போவதாக பேசிய சோபியா ரோபோ



இப்போது தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ரோபோக்கள், இனி வருங்காலத்தில் இயற்கை பேரிடர்களின் போது மக்களை காப்பாற்றவும், உயிர் காக்கும் மருத்துவ துறையிலும் கூட பயன்படுத்த கூடிய நிலை வரலாம்.
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 24 October 2017

17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்

நீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா? என்னப்பா விளையாடுறீயா? இதெல்லாம் கனவில் தான் நடக்கும் என்கிறீர்களா? கனவை நிஜமாக்கிய ஒருவரை பார்க்கலாமா? பிரேசில் நாட்டை சேர்ந்த கிலிபர் ரெனி ரிசரோ ரோச்சா நிஜமாகவே மாதக்கணக்கில் இப்படி பணகட்டுகளை தன் படுக்கைக்கு அடியில் பரப்பி வைத்து விட்டு தூங்கி உள்ளார், அது அவரை சிறையிலும் தள்ளி விட்டுள்ளது. 



பணத்தை படுக்கைக்கு அடியில் பரப்பி வைத்துவிட்டு தூங்குவது குற்றமில்லை என்றபோதிலும் அவர் தூங்கியது கோடிகணக்கான மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் என்பதால் கைது செய்யப்பட்டுள்ளார். டெலக்ஸ்ப்ரீ என்ற நிறுவனத்தின் பிரமிட் ஊழல் என்று அழைக்கப்படும் ஊழலில் கோடிகணக்கான மக்களை தொலை தொடர்பு இணைப்பு வழங்க போவதாக கூறி கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ஊழல் செய்துள்ளனர். அமெரிக்காவில் நடந்துள்ள இந்த ஊழலில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கார்லோஸ் வான்செலர் ஊழல் விவகராம் வெளியில் தெரிய வந்ததும் தன் தாய் நாடான பிரேஸில் நாட்டுக்கு தப்பி சென்று விட்டார். துணை நிறுவனரான ஜேம்ஸ் மெரில் குற்றவாளி  என்று நிரூபிக்கப்பட்டு இப்போது தண்டனைக்காக காத்து கொண்டுள்ளார்.



இப்போது சிக்கியுள்ள கிலிபர் ரெனி ரிசரோ ரோச்சாவின் வீட்டில் இருந்து இதுவரை 17 மில்லியன் டாலர் பணத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர். 
----------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 23 October 2017

நம்பிக்கை துரோகம் - மீண்டு வருவது எப்படி?

இந்த காலத்தில் எவ்வளவு தான் நாம் யாரிடமும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருந்தாலும் சில நேரங்களில் நாம் மிகவும் அன்பு வைத்து நம்பி இருப்பவர்கள் (நண்பர்கள், உறவினர்கள் என்று நாம் நினைத்திருப்பவர்கள் ) நம் முதுகில் குத்தி நமக்கு எதிராக தீமை செய்யும் போது உடைந்து போய் விடுவது இயல்பு, ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்தால் தான் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்த முடியும், நம்பிக்கை துரோகத்திலிருந்து - மீண்டு வருவது எப்படி? என்று விளக்கும் காணொளி காட்சி.

Sunday 22 October 2017

சாதி வெறி பிடித்த மனித மிருகங்கள்

சாதி வெறி பிடித்த மனித மிருகங்களின் கொட்டம் என்று அடங்குமோ தெரியவில்லை, பீகார் மாநிலத்திலுள்ள நாளந்தா நகரத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சவர தொழிலாளியான ஐம்பத்து நான்கு வயதாகும் மகேஷ் தாகூர், ஊர் தலைவரான சுரேந்திர யாதவின் வீட்டுக்குள் கதவை தட்டாமல் சென்றதால் அவரை எச்சிலை துப்ப செய்து அதை நக்க வைத்த அசிங்கம் நடந்துள்ளது. அந்த ஊர் பெண்களை கொண்டு அவரை செருப்பால் அடிக்கவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தது பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமாரின் சொந்த ஊர் நாளந்தாவில் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து விசாரிக்க அந்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நிச்சயமாக தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறியுள்ள பீகார் மாநில அமைச்சர் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இனி இப்படி நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Tuesday 17 October 2017

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பு வாசகர்களுக்கு தமிழர் டைம்ஸின்  
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

Monday 16 October 2017

உலகத்தை (இப்போது பெங்களுரு மாநகரை) புரட்டியெடுக்கும் பேய் மழை

இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை மாநகரை பாதித்த பேய் மழை இந்த வருடம் பெங்களுரு நகரை புரட்டியெடுத்து கொண்டிருக்கிறது. பெங்களுரு மாநகர வரலாற்றிலேயே மிக அதிகமான மழை பொலிவு (165 செ.மீ ) என்று வானிலை மையம் அறிவித்துள்ளது, இந்த மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்திகள் இப்போது தான் ஓவ்வொன்றாக வெளிவர துவங்கியுள்ளது. 

 ஓடும் ஆறாக மாறிய சாலையில் மிதக்கும் கார்கள்


எகோ ஸ்பேஸ் தண்ணீரில் மிதக்கும் அலுவலகங்கள்


இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள மாநிலங்கள், நேபாள், பங்களாதேஷ் நாடுகளில் பெய்த மழையால் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பை மாநகரமும் மழை வெள்ளத்தால் அடிக்கடி இந்த வருடத்தில் பாதிப்புக்கு உள்ளானது. தெற்கு ஆசியாவில் மட்டும் இந்த வருடத்தில் மழை வெள்ளத்தால் நாற்பத்தொரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு ஆசியாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் 


ஆசிய கண்டத்தில் மட்டும் தான் இந்த நிலையா என்று பார்த்தால்? அப்படியெல்லாம் இல்லை, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே (ஹரிக்கேன்) புயலும், ப்ளோரிடாவை இர்மா புயலும், இங்கிலாந்தில் பிரிட்டன் நகரமும், அயர்லாந்து தேசமும், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரமும் இந்த வருடத்தில் புயல் மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
ஒவ்வொரு நகரத்தையும் தாக்கும் புயல்களுக்கு பெயர் தான் மாறுகிறது, ஆனால் பாதிப்புகள் எல்லா நகரங்களிலும் பயங்கரமாகவே உள்ளது.


இந்த வருடம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது. இயற்கை மனிதர்களோடு தன் விளையாட்டை இத்தோடு நிறுத்தி கொள்ளுமா? இல்லை இன்னும் கொல்லுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எப்படி தயாராவது அல்லது எதிர்கொள்வது என்று விளக்கும் காணொளி காட்சி

Friday 13 October 2017

அடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார் பதிவு



# அடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார் பதிவு #

உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா என்ற போர்வையில் ஒரு மாஸ்டர் மைண்ட் மோசடியை நிகழ்த்தி, சுமார் 1.30 லட்சத்தை ஒரு வாலிபரின் ICICI சேலரி அக்கவுண்டில் இருந்து திருடியிருக்கிறார்கள், இதற்கும் அந்த பட்டதாரி வாலிபர் சமீபத்திய பின் நம்பர் கேட்கும் மோசடிகள், க்ரெடிட் கார்டு மோசடிகள் எல்லாவற்றையும் தெரிந்து மிக கவனமாகவே இருந்திருக்கிறார், இருந்தும் இந்த ஆதார் எண் இணைக்க வேண்டி தினசரி வரும் அழைப்புகள் போல இதுவும் இருந்ததால் ஏமாந்துவிட்டார், என்ன நடந்தது ?

“வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா ?”

“இல்லைங்க , இன்னும் இல்லை, “

“சார்! அரசு உத்தரவுப்படி இன்னும் சில நாட்களுக்குள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், நீங்கள் விரும்பினால் இந்த அழைப்பின் வழியாகவே உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம், உங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா ?”

“இருக்கு, சொன்னா போதுங்களா, நீங்களே அப்டேட் பண்ணிடுவீங்களா ?”

“நிச்சயமாக சார், உங்களுக்கு உதவுவதற்க்காவே இந்த வசதி, உங்கள் ஆதார் எண்ணை சொல்லுங்கள்!” (ஆதார் எண்ணை சொல்கிறார்,)

“ஆதார் எண் தந்தத்திற்கு நன்றி, உங்கள் எண் இந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுவிட்டது வாழ்த்துக்கள், இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதை செய்தால் மட்டுமே நீங்கள் தான் இந்த மொபைல் எண் உபயோகிப்பாளர் என எங்களால் உறுதி செய்துகொள்ளமுடியும்,”

"என்ன பண்ணணும்ங்க ?”

“உங்களது சிம் கார்டில் உள்ள 20 இலக்க சிம் எண்னை மெஸேஜில் SIM என டைப் செய்து ஏர்டெல்லின் 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அனுப்பவும், அனுப்பிய பிறகே உங்கள் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுமையடையும்,”

(யோசிக்கிறார்) “மேடம் ! சிம்மு போனுக்குள் இருக்குது, அந்த நம்பர் எனக்கு தெரியாதுங்களே”

“கவலை வேண்டாம் சார், உங்கள் சிம் நம்பரை இப்போது உங்களுக்கு மெஸேஜில் அனுப்பியுள்ளேன், அதை அப்படியே 121 என்ற எங்களது சேவை மைய எண்ணிற்கு அனுப்பவும், நன்றி”

“121 க்கு தானுங்க அனுப்பனும், வேற எங்கியும் இல்லீங்களே, ஏன்னா ஊர் பூரா முடிச்சவிக்கு பசங்க புதுபுதுசா ஏமாத்தறானுக, அதான் கேக்குறங்க”

“சார், இது ஏர்டெல்லின் அதிகார பூர்வ அழைப்பு, 121 எங்களது அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை மையம், அதற்க்கு மட்டுமே அனுப்பினால் போதும். நன்றி"

இப்படி நமக்கு ஒரு போன் வந்தா எத்தனை பேர் 121 க்கு சிம் நம்பர் அனுப்பியிருப்போம், கிட்டத்தட்ட எல்லோருமே, இல்லையா !! அதே போலத்தான் இவரும் அனுப்பியிருக்கிறார், அனுப்பிய சிலமணிநேரங்களில் இவரது அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து 10000 , 20000 என சரமாரிக்கு பணம் உருவப்பட்டு, இவர் சேர்த்து வைத்திருந்த Fixed Deposits உட்பட 1.30 லட்சங்களை மொத்தமாக 18 மணி நேரத்தில் அபேஸ் பண்ணிவிட்டார்கள், ஐயோ, இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா, சாத்தியமே !!
உங்கள் வங்கி கணக்குகளின் இணைய சேவை பாஸ்வேர்ட் மாற்றுவது, ஏடிஎம் பின் நம்பர் மாற்றுவது, புதிய அக்கவுண்டகளை இணைத்தல், பண பரிமாற்றம் என எதை இணைத்தாலும், மாற்றினாலும் அவை எல்லாமே ஒன்றே ஒன்றை அடிப்படையாக கொண்டே மாற்ற முடியும், அது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP, அந்த OTP யை பெற்றே மேற்சொன்ன மோசடியை நிகழ்த்தியிருக்கிறார்கள், எப்படி ?

ஏர்டெல் 3G யில் இருந்து 4G சிம்முக்கு உங்கள் எண்னை மாறுங்கள், ப்ரீ ப்ரீ என ஊர் பூரா கூவி கொண்டிருக்கிறது, இதற்காக ஒரு சேவையை தொடங்கியது, வாடிக்கையாளருக்கு இலவசமாக 4G சிம் கார்டுகளை தர தொடங்கியது, அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், SIM என டைப் செய்து 20 இலக்க புது சிம் எண்னை 121 க்கு அனுப்பிவிட்டால் இரண்டு மணிநேரத்தில் புதிதாக தரப்பட்ட 4G சிம்மில் உங்கள் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும், பழைய சிம்மை தூக்கி போட்டுவிட்டு இதை செருகி 4G தரத்தில் உபோயோகிக்கலாம், இந்த சேவையை தான் இந்த திருடர்கள் உபயோகித்து கொண்டனர், ‘எனக்கு சிம் நம்பர் தெரியாதுங்க’ என்ன சொல்லியதும் அவர்கள் அனுப்பினார்கள் பாருங்கள் ஒரு சிம் நம்பர் , அது உங்கள் போனில் நீங்கள் பேசி கொண்டிருக்கும் சிம்மின் 20 இலக்க எண் அல்ல, அவர்கள் கை வசம் ஆக்டிவேட் ஆக தயார் நிலையில் உள்ள ஒரு 4G சிம். அவர்கள் அனுப்பிய மெஸேஜை 121 க்கு நீங்கள் அனுப்பியதால் சிலமணி நேரங்களில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவர்கள் சிம்மில் உங்கள் எண் ஆக்டிவேட் ஆகிவிடும், பிறகு OTP என்ன, உலகமே உங்களிடம் பேச நினைத்தாலும் எல்லா அழைப்புகளும் அவனுக்கு தான் போகும். எவ்வளவு எளிமையாக, நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்!

மேற்சொன்ன மோசடியில் முதல் 3000 உருவப்பட்ட போதே ICICI க்கு சொல்லி அக்கவுண்ட்டை தற்காலிகமாக முடக்க சொல்லியிருக்கிறார் இளைஞர், ஆனால் ICICI தேமே என 18 மணிநேரம் தேவுடு காக்க, அதற்குள் மொத்த வைப்பு தொகையையும் சுருட்டிவிட்டார்கள் ,இந்த மாதிரி நூதன, எளிமையான, மிக மிக நம்பிக்கை தரும் வகையில் நீங்களும் ஏமாற்றப்படலாம், எக்காரணம் கொண்டும் OTP எண், PIN நம்பர் போன்றவைகளை யாரிடமும் பகிராதீர்கள், மோசடி பேர்வழிகளிடம் இருந்து,கவனமாக உங்கள் கையிருப்பை காத்திடுங்கள். நன்றி.

நன்றி: Hariharasuthan Thangavelu Facebook Post
----------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 11 October 2017

வைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை

சமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கிறது என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொல்லும் வீடியோ) பதிவிடப்பட்டது விளையாட்டுத்தனமாக  எல்லோரும் அந்த வீடியோவை பகிர தொடங்க வைரல் ஆனது. அது அந்த பள்ளி நிர்வாகத்துக்கும் எட்டியது. விளைவு, இப்போது பள்ளி நிர்வாகத்தால் அந்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் தந்தை இந்த சம்பவம் குறித்து விளக்கம் சொல்லி வருத்தம் தெரிவிக்கும் காட்சி இப்போது வெளியாகி உள்ளது. விளையாட்டு வினையாகும் என்று சொல்வார்கள், ஆசிரியை விஷயத்தில் நிஜமாகவே விளையாட்டு வினையாகிவிட்டது. 

இந்த வீடியோவை பார்த்த பிறகாவது பள்ளி நிர்வாகம் தவறை மன்னித்து ஆசிரியரை திரும்ப வேலைக்கு சேர்த்து கொள்ளலாம்.

பள்ளி சிறுவனின் தந்தை விளக்கம் சொல்லி வருத்தம் தெரிவிக்கும் காட்சி

--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 6 October 2017

நேர மேலாண்மை

ஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் 

ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக 

முடிந்திருக்காது அல்லது ஏதாவது ஒரு வேலை செய்யாமல் மறந்து 

போயிருப்பார்கள், இன்னும் சிலருக்கு சில வேலைகள் கடைசி 

நிமிடத்தில் தான் நினைவுக்கு வரும், எப்படியாவது இன்றைக்குள் இதை 

செய்து முடிக்க வேண்டும் என்று அரக்க பறக்க ஓடுவார்கள். சரியாக 

எல்லா வேலைகளையும் திட்டமிட்டு செய்வதின் மூலம் இந்த 

அவஸ்தைகளை தவிர்க்கலாம், எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள 

கானொளியில் காணுங்கள்...


Thursday 5 October 2017

ஒரு வாரம் ஒரு தேசம்

இந்த வாரம் வடகொரிய தேசம் குறித்த அதிர வைக்கும் பத்து 

உண்மைகள், தலையில் வளரும் முடியிலிருந்து உண்ணும் உணவு, 

உபயோகிக்கும் மின்சாரம் என்று சகலமும் ஒரு தனி மனிதனின் 

கட்டுபாட்டில், யோசித்து பார்த்தால் நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தின் அருமை பெருமை புரியும்.

Wednesday 4 October 2017

நிழலும் நிஜமும்

தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக இருப்பார், அப்போது தங்கள் கடமையை சரிவர செய்யாத ஊழியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்வது போல் காட்சிகள் அந்த திரைப்படத்தில் வைத்திருந்தார். கீழே நீங்கள் பார்க்கும் காணொளி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அரசாங்க மருத்துவமனைக்கு ஆய்வுக்காக சென்ற போது மருத்துவமனை அலுவலகத்தில் வேலை நேரத்தில் கம்ப்யுட்டரில் திரைப்படம் பார்த்து கொண்டிருந்த ஊழியருக்கு நேர்ந்தது இது...

Tuesday 3 October 2017

பிரபலத்தின் பிள்ளையென்றால்?

பிரபல இந்தி திரைப்பட  பாடகர் உதித் நாராயணனின் மகன் இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை பிரிவில் பணிபுரிபவரிடம் காரசாரமாக வாக்குவாதம் செய்யும் காட்சி தான் கீழே பகிரபட்டுள்ளது, தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் எடுத்து வந்திருந்த லக்கேஜ் சுமை விமான நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கவே அவரிடம் விமான நிறுவன பணிப்பெண் கூடுதல் எடைக்கு ரூபாய் பத்தாயிரம் அதிகம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார், அந்த தொகையை செலுத்த முடியாது என்று மறுத்து வாக்குவாதம் செய்த பாடகரின் மகன் ஆனந்த் நாராயணன் சமாதானம் செய்ய வந்த இன்னொரு ஆண் பணியாளரிடம் தரக்குறைவான முறையில் பேசியுள்ளார், நான் யார் தெரியுமா? மும்பை சென்று இறங்கியவுடன் நான் யார் என்று உனக்கு காண்பிக்கிறேன் நான் உன் ........யை கழற்ற வைக்காவிட்டால் என் பெயர் உதித் நாராயணன் இல்லை என்று. மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

ஒரு பிரபலத்தின் பிள்ளை என்பதற்காக விமான நிறுவன விதிமுறைகளை மதிக்காமல் செயல்படலாமா? அப்படி விதிமுறைகளை மீறும்போது விமான நிறுவன பணியாளர்கள் விதிமுறைகள் குறித்து விளக்க முயற்சித்தால் அவர்களிடம் எப்படி வேண்டுமானாலும் கீழ்த்தரமான பாஷையில் பேசி மிரட்டலாமா? பார்க்கும் நீங்களே சொல்லுங்கள்? 

Saturday 22 July 2017

வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி

ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, இன்னும் சிலருக்கு நன்றாக படித்திருந்தும் நல்ல வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான சிறந்த வேலை கிடைப்பதில்லை. இந்நிலையில் இவ்வுலகில் வாழ்வதற்கு அடிப்படை தேவையான வீடு கூட இல்லாமல் வீதியில் அலைபவர்களும் உண்டு. இரக்கம் சிறிதும் இல்லாத மனித உருவில் இருக்கும் மிருகங்கள் இவர்களை தரித்திரம் பிடித்தவர்கள் என்று சொல்லி ஒதுங்கி போவதும் உண்டு. 



 இப்படி வீதியிலும், சாலை ஓரங்களிலும் பொழுதை கழிக்கும் வீடிலாத மக்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு புகை, கால மாற்றத்தால் வரும் பனி , குளிர், தகிக்கும் வெயில் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்டு கவனிக்க ஆளில்லாமல் இறந்து போவதும் உண்டு. பள்ளி பருவத்தில் தன் வயது பிள்ளைகளோடு விளையாடி பொழுதை போக்க வேண்டிய ஹெயிலி போர்ட் (கிட்சாப் கவுன்டி, வாஷிங்டன்நகரம்) என்ற ஒன்பது வயது பள்ளி செல்லும் சிறுமி வீடில்லாத மக்களுக்கு நகரும் வீடு (தள்ளி செல்ல கூடிய) மொபைல் வீடுகளை கட்டி தரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?



 இவருடைய சேவை, வீடும் உணவுமின்றி, சாலையில் தவித்து கொண்டிருந்த எட்வர்ட் என்ற மனிதரை கண்டபோது துவங்கி இருக்கிறது. அந்த மனிதர் சாலையில் உணவின்றி பசியோடு தவிப்பதை பார்த்து இச்சிறுமி தன் தாயிடம் அவருக்கு ஏதாவது உணவு தரும்படி கேட்டிருக்கிறார், அவருக்கு ஒரு சான்ட்விச் கொடுத்து அவர் பசியை போக்கி இருக்கிறார், பிறகு இவரை போன்றவர்களுக்கு உதவி செய்வதற்கென்று தன் வீட்டு தோட்டத்தில் காய்கறிகளை பயிர் செய்து, விளையும் காய்கறிகளை உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார்.



 எட்வர்டுக்கு உணவு கொடுத்து உதவிய பின்பு தான் அவருக்கு வீடும் கிடையாது என்று தெரிய வந்துள்ளது, அவரது கஷ்டத்தை போக்க வீடு ஒன்றை அவருக்கு தயாரித்து கொடுக்க விரும்பி இருக்கிறார். எட்டுக்கு நாலு அளவில் ஜன்னலும் கதவும் கொண்ட சிறிய மர வீடுகளை சக்கரங்களோடு (தள்ளி செல்வதற்கு வசதியாக) தயார் செய்து இலவசமாக வழங்கி இருக்கிறார்.



 பின்பு வீடில்லாத மக்களுக்கு எல்லாம் தன் பெற்றோர்கள் உதவியுடன் வீடுகளை தயாரித்து வழங்க துவங்கி இருக்கிறார், இந்த வகை மொபைல் வீடுகளை உருவாக்குவதற்கு முன்னூறு டாலர் வரை செலவாகிறது (நம்ம ஊர் பணத்தில் சுமார் இருபதாயிரம் ரூபாய்) இவர் செய்யும் சேவையை அறிந்து இவருக்கு சலுகை விலையில் பொருட்களை சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.


"வீடில்லாமல் மக்கள் வீதியில் திரிவது எனக்கு சரியாக படவில்லை , எல்லா மனிதர்களுக்கும் தங்குவதற்கு சிறிய இடமாவது இருக்க வேண்டும், மோசமான வானிலை மாற்றங்களால் வீடில்லாத ஏழை மக்கள் பாதிக்கபடுவதை காண நான் விரும்பவில்லை" என்று கூறுகிறார் இந்த சிறு வயது கொடை வள்ளல். 

Sunday 16 July 2017

புதியதோர் உதயம் - சுபலக்ஷ்மி திருமண தகவல் மையம்



* சுபலக்ஷ்மி திருமண தகவல் மையம் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை குறிப்பிட்ட காலம் மட்டும் வரன் பதிவு கட்டணம் இல்லை. வரன் பதிவு முற்றிலும் இலவசம் 

இணையதளத்தில் இலவசமாக வரன் பதிவு செய்ய WWW.SUBALAKSHMI.COM

* அனைத்து இனத்தவருக்கும் ஏற்ற வரன் அமைத்து தரப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலவசமாக வரன் பதிவு செய்ய அழையுங்கள் 8940289987, 8940289778, 8940289909 

* ஈமெயில் மூலம் வரன் பற்றிய சுய விவர குறிப்பை எங்களுக்கு அனுப்பலாம்: எங்கள் ஈமெயில் முகவரி: shubamanam@gmail.com 

*  வாட்ஸ் அப் எண் மூலம் வரன் பதிவு செய்ய வரனின் சுய விவர குறிப்பை எங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்: 8940289909  


 * நேரில் வரன் பதிவு செய்ய தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை எங்கள் அலுவலகத்தில் இலவச வரன் பதிவு நடைபெற்று வருகிறது 

எங்கள் முகவரி: 

கடை எண்: 3,  6/ 81, சண்முகா காம்ப்ளக்ஸ், மாதவராவ் நகர் முதல் தெரு, அண்ணாநகர், நாஞ்சிகோட்டை ரோடு, தஞ்சாவூர் – 613006   

தொடர்புக்கு: 8940289987, 8940289778, 8940289909