Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Monday 12 August 2019

நட்சத்திர ஹோட்டல் - பில்லும் - லொள்ளும்


ப்போது இணையத்தில்  இரண்டு முட்டைகளுக்கு 1700 ரூபாய் பில் வழங்கிய உணவகத்தை  குறித்தும், சில நாட்களுக்கு முன்பு இரண்டு வாழைப்பழங்களுக்கு 442 ரூபாய் பில் வழங்கப்பட்ட சம்பவங்களை குறித்து  எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம். நட்சத்திர விடுதிகள், நட்சத்திர உணவகங்களில் உணவு அருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இது அடிக்கடி ஏற்படும் சங்கடம் தரும் அனுபவமாக உள்ளது. 

பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் மட்டுமே அத்தகைய நட்சத்திர விடுதிகள், உணவகங்களுக்கு செல்வதால் அவர்கள் பல சமயங்களில் பில் தொகையை சரிபார்க்காமல் பில்லிலுள்ள தொகையை பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் பணம் செலுத்தி விட்டு வந்து விடுகின்றனர், இது இப்படிப்பட்ட நட்சத்திர உணவகங்களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. 

சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது. அலுவலக விஷயமாக குர்கோன் நகரிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர தனியார் விடுதியில் (பெயர் வேண்டாம்) தங்கி இருந்தோம், அலுவலகத்திலிருந்து சென்ற  ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் புக் செய்யபட்டிருந்தது, எனது அறையில் இருந்த மேஜை டிராயரில் சிறிய பாக்கெட்களில் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, மிக்சர் மற்றும் குளிர்பானங்கள், இன்னும் சில ஸ்நாக்ஸ் வகைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதே மேஜையில் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய விலை பட்டியல் என் கண்களில் படவில்லை அன்று இரவு சரியாக உணவு ஏதும் அருந்தாததால் ஒரு முந்திரி பருப்பு பாக்கெட்டை பிரித்து சில நிமிடங்களில் முழுவதும் காலி செய்து விட்டேன், பின்பு தான் அங்கு இருந்த விலைப்பட்டியலை பார்த்தேன் அதில் முந்திரிப்பருப்பு பாக்கெட் 70 ரூபாய் என்று அச்சிடப்பட்டிருந்தது, பாக்கெட்டில் பார்த்தால் அந்த முந்திரிப் பருப்பின் விலை 40 ரூபாய் தான் என்று அச்சிடப்பட்டிருந்தது சரி கூடுதலாக 30 ரூபாய் தானே அதை செலுத்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் ரூமை காலி செய்து விட்டு ரிசப்ஷனில் எலெக்ட்ரானிக் கார்டை ஒப்படைக்கும்போது முந்திரிப் பருப்பிற்கான பில் தொகை 350 ரூபாய் என்று என்னிடம் கொடுத்தார்கள் அதை நான் வாங்க மறுத்து முந்திரி பருப்பு பாக்கெட்டின் விலை 70 ரூபாய் தான் என்று அச்சிடப்பட்டிருந்தது இப்போது நீங்கள் கொடுக்கும் பில்லில் பல மடங்கு வரி சேர்த்து 350 ரூபாய் என்று சொல்கிறீர்கள் இதை என்னால் கட்ட முடியாது, இது பற்றி  உங்கள் நட்சத்திர உணவு விடுதியின் மேலாளரை சந்தித்து புகாரளிக்க  வேண்டும் என்று அங்கிருந்த ரிஷப்னிஸ்ட்டிடம் கேட்டேன், அதற்கு  அவர் இப்போது மேலாளர் இங்கு இல்லை வருவதற்கு தாமதமாகும் என்று சொன்னார்கள். 

பின்பு, அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர்கள் வாடிக்கையாளர் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முயன்ற போது  அங்கு ரிசப்ஷனில் பணியில் இருந்தவர் நீங்கள் எந்தத் தொகையும் செலுத்த வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே என்னுடைய பில்லை கிழித்து குப்பை  தொட்டியில் எறிந்து விட்டார். நான் சாப்பிட்ட முந்திரி பருப்பிற்கான அசல் தொகையை (ரூபாய் 70) செலுத்த விரும்பிய போதும் அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை.

நான் எந்த கேள்வியும் கேட்காமல் பில் தொகையை செலுத்தியிருந்தால் 280 ரூபாய் அவர்களிடம் இழந்திருப்பேன், கேள்வி கேட்டதால் மொத்த தொகையுமே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை படிக்கும் நீங்களும் கேள்வி கேட்க தொடங்குங்கள், அனாவசியமாக பணத்தை இழக்காதீர்கள்.

--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------