Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Monday 4 June 2018

சுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்


ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற விளையாட்டு போட்டிகளில் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று இந்திய வீரர்கள் நம் நாட்டிற்கு தங்கமும் வெள்ளியும் வாங்கி தந்து பெருமைபடுத்திய போதும், பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள் அவர்கள் வெற்றி பெற்ற செய்தியை அறிவித்து தங்கள் கடமையை முடித்து கொண்டன, ஒரு சில வட இந்திய செய்தி தொலைகாட்சிகள் கூடுதலாக சில நிமிடங்கள் ஒதுக்கி வெற்றி பெற்ற வீரர்களின் பேட்டியை ஒளிபரப்பி அத்துடன் தங்கள் கடமையை முடித்து கொண்டன, அதன் பின்பு அந்த வீரர்கள் எங்கு இருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். மீண்டும் ஒரு சர்வதேச போட்டியில் வெற்றி பெறும் போது தான் அவர்கள் மீது மீடியாக்களின் வெளிச்சம் விழ துவங்கும். 


கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி வழியும் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கி போட்டிருக்கிறது கால்பந்து விளையாட்டு வீரர் (இந்திய கால்பந்து அணி கேப்டன்) சுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட். இந்தியாவில் கோடிகணக்கான மக்கள் பயன்படுத்தும் டிவிட்டர் சமூக ஊடகத்தில் சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளை காண வந்து தங்கள் (இந்திய) அணியினரை உற்சாகபடுத்துமாறு வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட காணொளி பல முறை விளையாட்டு வீரர்கள், ரசிகர்களால் பகிரப்பட்டு வைரல் ஆனதுடன் பதினைந்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய அந்த மைதானத்தில் (மும்பை ஃபுட்பால் அரீனா) இன்று மும்பையில் இந்தியா. கென்யா அணிகள் மோதும் கால்பந்து போட்டிக்கு எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது.       

கானொளியில் ரசிகர்களிடம் சுனில் கால்பந்து விளையாட்டை மைதானத்தில் வந்து காண இரண்டு முக்கிய காரணங்களை தெரிவித்திருந்தார், ஒன்று, கால்பந்து விளையாட்டு உலக அளவில் (ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும்) முதலிடத்தில் இருக்கும் விளையாட்டு, இரண்டாவது, இந்திய அணி கால்பந்து விளையாட்டை விளையாடுவது, அதோடு தங்கள் அணி விளையாடும் போது காலரியில் இருந்து ரசிகர்கள் எழுப்பும் உற்சாக கூச்சல் தங்களை போன்ற விளையாட்டு வீரர்களுக்கு போட்டியில் வெற்றி பெற உத்வேகத்தை அளிக்கும் என்றும் அதனால் கால்பந்து ரசிகர்கள் அனைவரும் தவறாமல் மைதானத்துக்கு வந்து இந்த போட்டிகளை காண வேண்டும் என்றும், சர்வதேச அளவில் கால்பந்து போட்டிகளில் புகழ் பெற்றிருக்கும் ஐரோப்பிய அணி விளையாடுவது போல் தங்கள் அணி விளையாடா விட்டாலும், எங்கள் அணியால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடி போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம், அதற்க்கு ரசிகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.


சுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட்



சுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட்டை கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், விராட் கோஹ்லியும் ஆர்வத்துடன் பகிர்ந்து  உற்சாகபடுத்தியது குறிப்பிடத்தக்கது, ஒரு மாற்றத்திற்காக இன்று ஒரு நாள் டிவியில் இந்திய அணி விளையாடும் கால்பந்து விளையாட்டை பார்க்க விரும்பினால் இன்று இரவு எட்டு மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல்கள் பக்கம் உங்கள் பார்வையை திருப்புங்கள். ஆன்லைனில் பார்க்க விரும்பினால் ஹாட்ஸ்டார், ஜியோ டிவியில் இந்த போட்டிகளை பார்த்து மகிழுங்கள். 
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Thursday 22 March 2018

பொம்மை கார் தயாரித்து அசத்தும் மாற்று திறனாளி


பிரேஸில் நாட்டில் உள்ள லாஸ்ட்ரோ பகுதியை சேர்ந்த 47  வயதான கேரால்டோ பெரைரா, இரண்டு கைகளும் இல்லாத நிலையில் தனது கால்களை பயன்படுத்தி மரத்தினாலான பொம்மை கார்கள் தயாரிக்கும் காணொளி காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கைகள் இல்லாத நிலையில், கால்களை மட்டுமே பயன்படுத்தி சுத்தியலை எடுத்து, கார் பொம்மை செய்ய தேவையான மர கட்டைகளை அளவு எடுத்து, கச்சிதமாக ரம்பத்தை கொண்டு வெட்டி பொம்மை கார்களை ஒரு மணி நேரத்தில்  தயாரித்து அசத்துகிறார் கேரால்டோ பெரைரா. சிறிய பொம்மை கார் என்றால் ஒரு மணி நேரத்தில் தயாரித்து விடுகிறார், பெரிய டிரக் பொம்மை கார் செய்வதற்கு  இரண்டு மணி நேரம் பிடிக்கும். மின்சார ரம்பம் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு பத்து பொம்மை கார்களை செய்து கொடுத்து விடுவேன் என்கிறார்  பெரைரா. 



                                                                             காணொளி காட்சி: நியூயார்க் போஸ்ட்

தன் உடல் ஊனம் தான் தொழில் செய்து சம்பாதிக்க ஒரு தடையாக இருப்பதாக பெரைரா ஒருபோதும் நினைக்கவில்லை. சிறு வயதிலிருந்தே யாரையும் எதிர்பார்க்காமல் தன் சொந்த காலில் நிற்கும் விருப்பம் கொண்டிருந்த பெரைரா தினமும் ஊர் ஊராக சென்று தான் தயரிக்கும் பொம்மை கார்களை விற்று வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார். ஒரு பழுதான பொம்மை டிரக்கை தன்னிடம் யாரோ ஒருவர் கொடுத்து விட்டு செல்ல அதை பழுது பார்க்க  முயற்சித்தபோது பொம்மை கார் தயாரித்து விற்கும் எண்ணம் வந்ததாக சொல்கிறார்  பெரைரா.
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 11 February 2018

உலகின் மிகவும் அபாயகரமான ஐஸ்க்ரீம்


ஸ்க்ரீம் என்றால் அதன் குளுமையும், இனிப்பு சுவையும் தான் நம் நினைவுக்கு வந்து நாவில் எச்சில் ஊற வைக்கும் ஆனால் இன்று நீங்கள் காண போகும் இந்த  ஐஸ்க்ரீமை ஒரு முறை சிறிதளவு சாப்பிட்டால் இனிமேல் வாழ்கையில் ஐஸ்க்ரீம் பக்கமே தலை வைத்து கூட படுக்க மாட்டீர்கள்.  கிட்டத்தட்ட ஐநூறு டொபாஸ்கோ சாசில் உள்ள காரத்தன்மையும், சூடும், இந்த  ஐஸ்க்ரீம் வாய்க்குள் சென்றதும் உள்ளே ஒரு அணுஆயுத யுத்தமே வெடிப்பதாக சாப்பிட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.  



ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவ் நகரில் உள்ள ஆல்ட்விட்ச் கேஃப்பில் காதலர் தின சிறப்பு தயாரிப்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்க்ரீம், பார்த்தாலே சிவந்த மிளகாய் நிறத்தில் நம்மை சுண்டி இழுக்கும் விதத்தில் காட்சியளிக்கிறது. இந்த ஐஸ்க்ரீம் உலகின் மிகவும் அபாயகரமான ஐஸ்க்ரீம் என்று இதன் தயாரிப்பாளர்களால் எச்சரிக்கப்படுவதோடு இந்த ஐஸ்க்ரீமை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் ஒரு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு கவுண்டரில் கொடுத்த பின்னர் தான் ஐஸ்க்ரீம் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர் என்ற உறுதிமொழியும், இந்த ஐஸ்க்ரீமை சாப்பிடுவதனால் உங்கள் உடலுக்கு தீங்கு, காயம், மயக்கம் மற்றும் உயிரிழப்பும் கூட ஏற்படலாம் என்ற எச்சரிக்கை குறிப்பும் அந்த சட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




ஐஸ்க்ரீமை ஸ்கூப்பை எடுத்து உங்களுக்கு வழங்கும் பணியாளர்கள் கையில் இந்த ஐஸ்க்ரீம் தங்கள் கையில் பட்டு விடக்கூடாது என்று கையுறை அணிந்தே மிக கவனமாக இந்த ஐஸ்க்ரீமை எடுத்து வழங்குகின்றனர். 

இத்தாலி நாட்டின் பாரம்பரிய ரகசிய தயாரிப்பான இந்த ஐஸ்க்ரீம் ரெஸ்பிரோ டெல் டியவோலோ - (சாத்தானின் சுவாசம்) என்று அழைக்கப்படுகிறது. ஆல்ட்விட்ச் கேஃப்பின் உரிமையாளரான மார்ட்டின் படோனி கூறும் போது, இத்தாலி நாட்டின் டெவில்ஸ் பிரிட்ஜ் என்ற பாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இத்தாலி நாட்டின் ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்கள் அனைவரும் சந்தித்து அந்த ஆண்டு அவர்களுக்கு எப்படி இருந்தது என்று கலந்துரையாடுவார்கள். அங்கு வரும் ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க இந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டு காட்ட சொல்லி சவால் விட்டு போட்டிகள் நடக்கும்.

                                                                                 
                                                                                                               காணொளி காட்சி: swns

சாத்தானின் பாலம் என்ற இடத்தில் வைத்து இந்த அபாயகரமான ஐஸ்க்ரீம் சாப்பிடும் சவால் நடப்பதால் இந்த ஐஸ்க்ரீம் சாத்தானின் சுவாசம் என்று அழைக்கப்படுகிறது.கிளாஸ்கோவ் நகர மக்கள் இது போன்ற சவாலான காரியங்களில் பங்கு பெறுவதில் மிகுந்த ஆர்வமுடையவர்கள், மேலும் காரமான உணவுகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் அதனால் இந்த ஐஸ்க்ரீமை அவர்கள் வரவேற்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மார்ட்டின் படோனி. 

--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Thursday 25 January 2018

சொந்த நாட்டில் பறந்து போகும் சுத்தம்



சிங்கப்பூரில் வசித்து வரும் என் நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன் அலுவலக விடுமுறையில் இந்தியா திரும்பியிருந்தார். ஒரு பேருந்து பயணத்தில் தற்செயலாக அவரை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவரது மகனுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் மகன் ஜன்னலோர இருக்கையிலும், நண்பர் அவனுக்கு அடுத்த இருக்கையிலும் அமர்ந்திருந்தனர்,  என்னை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்று சொல்லி சிங்கப்பூரில் தன் வேலை, சிங்கப்பூர் நாட்டின் சுத்தம், சுகாதாரம் குறித்து மக்களிடம் உள்ள விழிப்புணர்வு என்று பல விஷயங்களை என்னிடம் மிகுந்த பெருமையுடன் சொல்லி கொண்டு வந்தார், சிங்கப்பூர் நாட்டில் சாலைகளில் கூட குப்பை போட முடியாது , சட்டப்படி அது குற்றம், சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் பேசி கொண்டு வந்தார். 

அவர் சொல்வதை கேட்ட போது சிங்கப்பூர் நாட்டின் சட்டம் கடுமையாக இருப்பதால் அங்கு மக்கள் மிகவும் எச்சரிக்கையோடு பொது இடங்களில் குப்பை போடுவதையும், அசுத்தம் செய்வதையும் தவிர்க்கின்றனர், நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இல்லாததால் மக்கள் தொடர்ந்து பொது இடங்களில் அசுத்தம் செய்து வருகின்றனர் என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன், நான் இப்படி நினைத்து கொண்டிருக்கும் போதே நண்பரின் மகன் வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலை போடுவதற்கு நண்பரிடம் கவர் கேட்டான், அவனுக்கு  நண்பர் அளித்த பதிலை கேட்டதும் எனக்கு ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது. அவ்வளவு நேரம் என்னிடம் சுத்தம் பற்றி மிகவும் ஆர்வமாக சொல்லி கொண்டு வந்தவர் மகனிடம் "தம்பி இது சிங்கப்பூர் இல்லை, நம்ம ஊருக்கு (இந்தியாவுக்கு) வந்துட்டோம், நான் குப்பை கவர் எடுத்துட்டு வரல, நீ தோலை அப்படியே ஜன்னல் வழியா தூக்கி போட்டுடு யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க" என்றார்.

சிங்கப்பூர் நாட்டில் சட்டம் கடுமையாக இருப்பதால் சுத்தத்தை கடைபிடிக்கும் நண்பருக்கு, சொந்த ஊர் (இந்தியா) திரும்பியவுடன் வசதியாக எங்கே வேண்டுமானாலும் குப்பை போடலாம், அசுத்தம் செய்யலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது, நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்று அரசு எவ்வளவோ திட்டங்கள் போடுகிறது, ஆனால், இது போன்ற (குப்பை) எண்ணம் மக்கள் மனங்களிலிருந்து அகன்றால் தான் நாடு சுத்தமாகும். 
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Saturday 13 January 2018

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



லகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழர் டைம்ஸ் மின்னிதழின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Saturday 6 January 2018

மனிதர்கள் ஜாக்கிரதை

னிதர்களுக்கு தங்கள் சக மனிதர்கள் மேல் உள்ள அன்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து மனிதாபிமானம் என்பதே மறைந்து போய் கொண்டிருப்பதையே இந்த வாரம் தொலைக்காட்சி செய்திகளை பார்க்கும் போது தோன்றுகிறது.  அன்பு, சகிப்புத்தன்மையும், பொறுமை போன்ற நற்குணங்கள் எல்லாம் முற்றிலுமாக மனித மனங்களில் இருந்து மறைந்து விட்டால் மனிதனை விட கொடிய மிருகம் உலகில் இருக்க முடியாது என்பதையே நீங்கள் கீழே காண போகும் மூன்று சம்பவங்களும் உங்களுக்கு உணர்த்தும்.

பெற்ற தாயை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்ற மகன்
பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்துள்ளார், அவரை  கவனித்து  கொள்ள முடியாமல் பெற்ற மகனே தாயை மாடிக்கு அழைத்து சென்று மேலே இருந்து தள்ளிவிட்டு கொன்றது சிசிடிவி காட்சி பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது.  இந்த காட்சியை  பார்த்துவிட்டு இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று பொதுமக்கள் சமூக ஊடகங்களில் குமுறி இருக்கின்றனர். அங்கு கண்காணிப்பு கேமரா இருந்ததால் இந்த சம்பவம் பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது. ஒரு வேளை அந்த கேமரா காட்சி பதிவு வெளிவராமல் போய் இருந்தால் வயதான தாய் தடுமாறி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டார் என்று தான் செய்தி வெளிவந்திருக்கும். ஒரு மகனாக நோய்வாய்பட்ட தாயை வீட்டில் வைத்து கவனிக்க முடியாவிட்டாலும், வெளியில் உள்ள காப்பகங்களிலாவது சேர்த்து விட்டிருக்கலாம். ஆனால், மனைவியின் துணையோடு மகனே தாயை கொன்று விட்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.   


பெற்ற மகளை மாடியில் இருந்து கீழே வீசி கொன்ற தாய்
தாயை கொல்லும் மகன் மட்டுமல்ல, மகளை கொல்லும் தாயும் உண்டு. சென்ற வருடம் பெங்களுருவில் உள்ள ஜே.பி நகர் பகுதியில் கணவனை பிரிந்து ஏழு வயது மகளோடு வாழ்ந்து வந்த ஆசிரியை ஒருவர் கணவன் மீது கொண்ட வெறுப்பு காரணமாக இரண்டு முறை மாடியில் இருந்து தன் மகளை கீழே வீசி கொன்ற சம்பவம் நடந்தது, முதல் முறை சிறு காயங்களோடு தப்பிவிட்ட சிறுமி, இரண்டாவது முறை கீழே வீசப்பட்ட போது பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டாள். பெற்ற மகளை கொன்று விட்டு தப்ப முயன்ற பெண்ணை அந்த பகுதியில் வசித்த மக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.  


2 வயது குழந்தையை மாடிப்படியில் இருந்து உருட்டிவிடும் தாய்

டெல்லியில் சென்ற வருடம், புகுந்த வீட்டாரோடு ஏற்பட்ட பிரச்சினையில், வாக்குவாதம் முற்றியதில் தான் பெற்ற 2 வயது மகனையே மாடிப்படியில் இருந்து உருட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் தாய், நல்ல வேளையாக உடனே தாத்தாவும், பாட்டியும் குழந்தையை ஓடி சென்று தூக்கி காப்பற்றி விட்டனர்.


வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் வீட்டு கதவில் நாய்கள் ஜாக்கிரதை என்ற வாசகம் இருப்பதை கவனித்து இருப்பீர்கள், இப்படி  பெற்ற தாயை கொல்லும் மகன்களும், தான் பெற்ற  பிள்ளையையே கொல்லும் தாய்களும் உலகில் இருப்பதை சொல்லும் இந்த பதிவிற்கு   மனிதர்கள் ஜாக்கிரதை என்று தலைப்பு வைத்தது சரி தானே?
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
-------------------------------------------- சமூக ஊடகங்களில் பின் தொடர