பிரேஸில் நாட்டில் உள்ள லாஸ்ட்ரோ பகுதியை சேர்ந்த 47 வயதான கேரால்டோ பெரைரா, இரண்டு கைகளும் இல்லாத நிலையில் தனது கால்களை பயன்படுத்தி மரத்தினாலான பொம்மை கார்கள் தயாரிக்கும் காணொளி காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கைகள் இல்லாத நிலையில், கால்களை மட்டுமே பயன்படுத்தி சுத்தியலை எடுத்து, கார் பொம்மை செய்ய தேவையான மர கட்டைகளை அளவு எடுத்து, கச்சிதமாக ரம்பத்தை கொண்டு வெட்டி பொம்மை கார்களை ஒரு மணி நேரத்தில் தயாரித்து அசத்துகிறார் கேரால்டோ பெரைரா. சிறிய பொம்மை கார் என்றால் ஒரு மணி நேரத்தில் தயாரித்து விடுகிறார், பெரிய டிரக் பொம்மை கார் செய்வதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். மின்சார ரம்பம் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு பத்து பொம்மை கார்களை செய்து கொடுத்து விடுவேன் என்கிறார் பெரைரா.
காணொளி காட்சி: நியூயார்க் போஸ்ட்
தன் உடல் ஊனம் தான் தொழில் செய்து சம்பாதிக்க ஒரு தடையாக இருப்பதாக பெரைரா ஒருபோதும் நினைக்கவில்லை. சிறு வயதிலிருந்தே யாரையும் எதிர்பார்க்காமல் தன் சொந்த காலில் நிற்கும் விருப்பம் கொண்டிருந்த பெரைரா தினமும் ஊர் ஊராக சென்று தான் தயரிக்கும் பொம்மை கார்களை விற்று வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார். ஒரு பழுதான பொம்மை டிரக்கை தன்னிடம் யாரோ ஒருவர் கொடுத்து விட்டு செல்ல அதை பழுது பார்க்க முயற்சித்தபோது பொம்மை கார் தயாரித்து விற்கும் எண்ணம் வந்ததாக சொல்கிறார் பெரைரா.
முந்தைய பதிவுகள்:
சமூக ஊடகங்களில் பின் தொடர