Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Sunday 5 November 2017

அமெரிக்க அதிபரின் ஆசிய சுற்று பயணம்



அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்பு முதல்முறையாக ஆசிய நாடுகளுக்கு 12 நாள் நீண்ட  அரசு முறை சுற்று பயணத்தை இந்த மாதத்தில் துவங்கி இருக்கிறார் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம்,  பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்யும் வகையில் அவருடைய சுற்றுபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்க அதிபராய் இருந்த ஜார்ஜ் புஷ் 1992 ஆம் ஆண்டு இதே போன்று நீண்ட ஆசிய சுற்றுபயணத்தை  மேற்கொண்டார். அதன் பின்பு இத்தகைய நீண்ட சுற்றுபயணத்தை இப்போது அமெரிக்க அதிபராய் உள்ள டொனால்ட் டிரம்ப் துவங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

(நவம்பர் 5 - 6) இந்த ஆசிய சுற்றுபயணத்தின் போது ஜப்பான் நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்றிருக்கும் ஷின்ஷோ அபேயை சந்திக்கும் டிரம்ப் அவருடன் வட கொரியாவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து விவாதிக்க கூடும் என்று தெரிகிறது. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையில் இரண்டு ஏவுகணைகள் ஜப்பான் வான் எல்லையின் மேல் பறந்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பயணத்தில் கோல்ப் விளையாட்டு வீரரான ஹிதேகி மட்சுயோமாவையும் பிரபல பாப் இசை பாடகரான பிகொடாரோவையும்  ட்ரம்ப்  சந்திக்க இருக்கிறார். 

(நவம்பர் 7) தென் கொரியா அதிபராய் இருக்கும் மூன் ஜே-விற்கு டிரம்ப் மற்றும் ஷின்ஷோ அபேவுடன்  வட கொரியா விவகாரத்தில் சில கருத்து வேறுபாடுகள் உண்டு, மூன் ஜே வட கொரியாவுடன்  பேச்சுவார்த்தைகள் நடத்தி அதன் மூலமாக சுமுக தீர்வை அடைய விரும்புகிறார், ஆகவே தென் கொரிய அதிபரை சந்திக்கும் போது வட கொரியா விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விளக்க வாய்ப்பு இருக்கிறது. 

(நவம்பர் 8 - 9) டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பின்பு சீனாவுடன் சுமூகமான உறவு நீடித்து வருகிறது, சீன அதிபரான சி ஜின்பிங்யை  சந்திக்கும்போது சீனாவின் எல்லைபுற வழியாக வட கொரியா நடத்தி வரும் ரகசிய வர்த்தகங்களை தடுக்க நடவடிக்கைகளை தீவிரபடுத்தும்படி வலியுறுத்த வாய்ப்புள்ளது. வட கொரியாவின் 90 சதவிகித வர்த்தகம் சீன எல்லையின் வழியாகவே நடைபெற்று வருகிறது.   சீனாவின் துணையில்லாமல் வட கொரியாவால் வெற்றிகரமாக வர்த்தகம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவுடன் சீனா சில வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது.

(நவம்பர் 10 - 11) வியட்நாம் நாட்டின் தலைநகரில் நடக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளார், புடினுடன் டிரம்ப் சிரியா, உக்ரைன் மற்றும் வட கொரியா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

(நவம்பர் 12) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டரேட்டை சந்திக்கும் டிரம்ப் அங்கே அவருடன் ஆசியான் (ASEAN) அமைப்பில் உள்ள பல நாடுகளின் அதிபர்களையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் டுட்டரேட் அந்த நாட்டில் பெரும் தலைவலியாய் இருந்து வந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுத்து அமெரிக்க அதிபரின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க அதிபரின் இந்த நீண்ட ஆசிய சுற்றுப்பயண திட்டத்தில் இந்தியா இடம் பெறவில்லை என்ற போதிலும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நடைபெறும் வாய்ப்பு உள்ளது. 
சென்ற வார உலகம் படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள் --------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்