Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Wednesday 21 June 2017

பிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி

சீனாவில் ஒரு தாய்க்கு பிறந்த ரெட்டை சகோதரிகள் பிறந்த உடன் இருவரும் இரு வேறு குடும்பத்தில் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும்  ஒன்று சேர்ந்த அதிசயம் சமீபத்தில் நடந்திருக்கிறது.



 அமெரிக்காவிலுள்ள வின்கன்சின் மாகாணத்தை சேர்ந்த ஆட்ரே டோரிங், வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த கிரேசி ரெயின்ஸ்பெரி இருவருக்கும் இப்போது பத்து வயதாகிறது, இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போது ஆனந்த கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தனர்.


ஆட்ரே டோரிங்கின் தத்து தாயான ஜென்னிபர் டோரிங் தான் முதலில் தான் தத்தெடுத்த மகளை போலவே இன்னொரு குழந்தையும் உள்ளது என்ற உண்மையை தெரிந்து கொண்டார், அவர் இந்த இரட்டை சகோதரிகளை பெற்றெடுத்த தாய் தன் மடியின் இரு பக்கமும்  இரண்டு சகோதரிகளையும் அமர வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை காண நேர்ந்தது, இரண்டு குழந்தைகளும் ஒன்று போலவே இருந்தன, ஒரு குழந்தை தான் தத்தெடுத்த ஆட்ரே என்று புரிந்து கொண்டார், இன்னொரு குழந்தையை தேடும் முயற்சியை தொடங்கினார். இன்னொரு குழந்தையை தத்தெடுத்த தாயான நிகோல் ரெயின்ஸ்பெரியை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்தார்.



டாக்டர் நான்சி சேகல் என்ற மருத்துவர் இரண்டு சிறுமிகளுக்கும் டி என் ஏ பரிசோதனை மேற்கொண்டு இருவரும் ரெட்டையர் தான் என்று உறுதிபடுத்தி உள்ளார்.

இரட்டை சகோதரிகள் இருவரும் பேரில் சந்திப்பதற்கு முன்பு வீடியோ மெசேஜிங் மூலம் தொடர்பு கொண்டு பேசினர், அப்போது இருவரும் தங்கள் வெளிதோற்றம் முதல் குணாதிசயங்களில் உள்ள ஒற்றுமைகளை பகிர்ந்து கொண்டனர்.

இரட்டையர்கள் இருவருக்கும் சில இதய கோளாறுகள் இருந்துள்ளன, அதற்காக இருவருக்கும் சில அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. இரண்டு சிறுமிகளும் சிக்கன் அல்பிரெடோ மற்றும் மாக் அண்ட் சீஸ் உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.

குட் மார்னிங் அமெரிக்கா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்த போது அனந்த கண்ணீர் விட்டது இணைந்த இரு ரெட்டை சிறுமிகள் மட்டுமல்ல, அவர்களை கண்ட ஸ்டுடியோவில் இருந்த அத்தனை பார்வையாளர்களும் தான் என்கிறார் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜின்ஜர் சீ .