Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Thursday 8 June 2017

தஞ்சையில் உழவன் சிறு தானிய அங்காடி - பாரம்பரிய உணவகம்

நம் முன்னோர்கள் காலத்தில், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு  எல்லாம் கிடையாது ஒரு இரண்டு, மூன்று  தலைமுறைகளுக்கு முன்பு கேன்சர், சுகர்,  பிரஷர்,......போன்ற வியாதிகள் எல்லாம் எங்கோ கோடியில் ஒருவருக்கு இருந்தது, ஆனால் இன்றைக்கு இந்த வியாதிகள் எல்லாம் பாதிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த கொடிய வியாதிகள் நாம் அன்றாடம் உண்ணும் உணவு பொருட்கள் (ரசாயன உரம் தெளித்து விளைந்த உணவு தானியங்கள்) மூலமாக நம் உடலுக்குள் சென்று விஷம் விதைத்து நம் மக்களின் ஆயுள் காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றன.



இப்போது எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின்பு மக்களின் பார்வை இயற்கை உணவகங்கள் பக்கம் திரும்பி உள்ளது.



கடந்த மே மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி முதல் தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உழவன்  சிறு தானிய அங்காடி - பாரம்பரிய உணவகம் என்ற உணவகம் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.



நான் கடந்த புதன் கிழமை ஏழாம் தேதி இரவு , அந்த சாலை வழியே சென்ற போது இந்த உணவகம் என் கண்ணில் பட்டது, சரி ஒரு நாள் வழக்கமான உணவை தவிர்த்து இந்த இயற்கை உணவை  சாப்பிட்டு பார்ப்போம் என்று உள்ளே சென்றேன். இயற்கை உணவகம் என்ற பெயருக்கேற்ப உணவகத்தின் உள் அலங்காரம் மரத்தால் செய்யப்பட்ட வித்தியாசமான வடிவத்தில் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாசகம் பளிச்சென்று தெரிந்தது.



அன்றைய சிறப்பு உணவு பட்டியலை சிறிய போர்டில் எழுதி வைத்திருந்தனர், நான் முள்ளங்கி சூப் ஒன்றை ஆர்டர் செய்தேன் , சிறிது நேரத்தில் சுடச்சுட ஆவி பறக்க முள்ளங்கி சூப் அழகான கோப்பையில் கொடுத்தனர், வழக்கமான சுவைக்காக சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் எதுவும் சேர்க்கவில்லை, தூள் உப்பு பயன்படுத்தவில்லை, உடல் நலனுக்கு கேடு விளைவிக்காத சூப்பை குடித்து முடித்து விட்டு  அடுத்து என்ன இருக்கிறது என்று பார்த்தால் சிறுதானிய கஞ்சி, நவதானிய சுண்டல், சிவப்பரிசி தோசை, பொன்னாங்கண்ணி தோசை, வெஜிடபிள் ஆம்லேட் என்று பட்டியல் நீண்டது.


ஒரு பொன்னாங்கண்ணி தோசை ஆர்டர் கொடுத்த சில நிமிடங்களில் தொட்டு கொள்ள சாம்பார், தேங்காய் சட்டினியுடன் பரிமாறப்பட்டது, பச்சை நிறத்தில் வித்தியாசமான சுவையுடன் தோசை இருந்தது,   அடுத்து ஒரு சிவப்பரிசி தோசை ஆர்டர் செய்தேன், சாப்பிட்டு முடித்து திரும்பினால் உள்ளே சிறுதானியங்களில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகள், ரெடிமிக்ஸ் வகைகள் விற்பனைக்கு வைக்கபட்டிருந்தது.



இந்த அங்காடியின்  ஊழியருடன்  பேசிய போது உணவு பொருட்கள் பார்சல் செய்வதற்கு பாலிதீன் பைகள் பயன்படுத்துவதில்லை ( கான்சர் நோய் வருவதற்கு சூடான உணவு பொருட்களை  பாலிதீன் பைகளில் அடைத்து தருவதும் ஒரு காரணமாகும்) , உணவகத்தில் ஃபிரிட்ஜ், குளிரூட்டி (ஏசி) பயன்படுத்துவதில்லை உணவில் வெள்ளை சக்கரை, தூள் உப்பு, மைதா, அஜினோ மோட்டோ, மரபணு மாற்று காய்கறிகள் போன்றவைகள் தவிர்க்கபட்டுள்ளது. உணவு சமைக்க அலுமினிய பாத்திரங்களும் பயன்படுத்துவதில்லை என்று உணவகத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்ள முடிந்தது.



நாக்கு சுவைக்கு அடிமையானவர்களுக்கு ருசியான விருந்து படைக்க இன்று எண்ணற்ற உணவகங்கள் இருக்கின்றன, ஆனால்  மக்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்காத சத்தான உணவுகளை தரும் உணவகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அந்த வகையில் தற்போது தஞ்சையில் திறக்கப்பட்டுள்ள உழவன் சிறு தானிய அங்காடிக்கு  ஒரு முறை சென்று இயற்கை உணவை ருசித்து வாருங்கள்.
எண்ணம், எழுத்து, புகைப் படங்கள்: வெற்றி வேந்தன் (எ) ஷங்கர்.ஜெ