Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Sunday 11 June 2017

ஐந்து வயதில் தீயிலிருந்து தன்னை காப்பாற்றிய காவல் துறை அதிகாரியை பத்தொன்பது வருடங்கள் கழித்து சந்தித்த பெண்

சிறு வயதில் தன்னை  தீ பற்றியெறிந்த தன் வீட்டிலிருந்து காப்பாற்றிய தீயணைப்பு படை வீரரை மீண்டும் தன் பட்டமளிப்பு விழா நாளில் சந்திக்க விரும்பிய பெண்.



1998 ஆம் ஆண்டு ஜூன் இருபத்தி ஐந்தாம் தேதி   ஜோசிபெல் அபொண்டே,    ஐந்து  வயதில்  நடந்த சம்பவம் இது. கனக்டடிகட் நகரில் இருந்த தன் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வீட்டில் திடீரென  தீ பற்றி எரிய தொடங்கியது, அதே வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவள் மாமாவை தீயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருந்த அபொண்டேவை ஒரு தீயணைப்பு வீரர் தீயிலிருந்து காப்பற்றி, சரியான நேரத்தில் அங்கு வந்த  காவல் துறை அதிகாரி பீட்டர் கெட்சின் கையில் ஒப்படைத்தார் .



பீட்டரின் கையில் அபொண்டே கொடுக்கப்பட்டபோது மூச்சு பேச்சில்லாமல் மயங்கி இருந்தாள், இருதய துடிப்பு நின்று போயிருந்தது. உடனடியாக, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில்  காவல் துறை வாகனத்தின் பின்பகுதியில் வைத்து இதய இயக்க மீட்பு (CPR) அவசர சிகிச்சை கொடுத்தார் பீட்டர், நல்ல வேளையாக அவர் அளித்த அவசர சிகிச்சையினால் அவள் மூச்சு திரும்பியது.



இந்த சம்பவம் நடந்து பத்தொன்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அபொண்டே தன்னை தீயின் நாக்கிலிருந்து காப்பாற்றிய வீரரை தன் வாழ்நாளின் மிக முக்கியமான நாளில் சந்திக்க விரும்பி இருக்கிறார், ஆம் அபொண்டே இப்போது கல்லூரியில் பட்டபடிப்பு முடித்து பட்டமளிப்பு விழா  நாள் வந்திருந்தது. இந்த வீரர் மட்டும் தன்னை தீயிலிருந்து காப்பாற்றி இருக்கா விட்டால் இன்று தான் படித்து பட்டம் வாங்கி இருக்க முடியாது என்று நன்றி உணர்வோடு நினைவு கூருகிறார்.



சமீபத்தில், அபொண்டே அளித்த பேட்டி ஒன்றில் " நம் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வுகள் எப்போதாவது தான் வரும், அது போன்ற முக்கியமான நிகழ்வில் யாரெல்லாம் என் வாழ்வில் முக்கியமானவர்களாக இருந்தார்களோ அவர்களை இந்த பட்டமளிப்பு விழா நாளில் சந்திக்க விரும்பினேன், என் வாழ்வின் மிக மோசமான சூழ்நிலையில்  அவர்கள் என்னோடு கூட இருந்து எனக்கு உதவியவர்கள்,  கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருந்த என்னை மீட்டெடுத்து எனக்கு மறு வாழ்வு கொடுத்தவர் பீட்டர் ,  தீயணைப்பு குழுவினர் மற்றும் அந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உதவிய முகம் தெரியாதவர்கள் எல்லோருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார்.



பீட்டர் கெட்ஸ் கூறுகையில் " இது என் வாழ்வில் இதயத்தை தொட்ட மறக்க முடியாத சம்பவம், அந்த நேரத்தில் நான் சென்ற போது நிலைமை கட்டுக்குள் வந்திருந்தது, தீயணைப்பு வீரர்கள் அவர்கள் கடமையை செய்தனர், நான் என் கடமையை செய்தேன், மருத்துவர்களும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றியதால் இன்று ஒரு அழகான இளம் பெண்ணாக அபொண்டேவை  இந்த பூமியில் பார்க்க முடிகிறது" என்றார்.

எவ்வளவு நன்மைகள் செய்தாலும், செய்த நன்மை மறந்து குறை கூறி தூற்றும் நன்றி மறந்தவர்கள்  வாழும் உலகில் பத்தொன்பது வருடங்கள் கடந்தும் தன் உயிரை  காப்பாற்றிய ஒருவரை நினைவில் வைத்து அன்புடன் தன் பட்டமளிப்பு விழா நாளில் சந்தித்து நன்றியோடு மரியாதை செலுத்திய அன்பு உள்ளத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வெற்றி வேந்தன் (எ) ஷங்கர். ஜெ