Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Monday 19 June 2017

புலி வளர்ப்பு

"நான் அவைகளை என் பிள்ளைகள் போல பார்த்து கொள்கிறேன், அவைகளை பொறுத்த வரை என்னை தங்கள் தாயாகவே நினைக்கின்றன, என் முகத்தோடு முகம் வைத்து உரசி விளையாடி, மூக்கில் முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன" என்கிறார் ஜேனிஸ் ஹேலி. இவர் தன் வீட்டில் வளர்க்கும் நாய் குட்டிகளை பற்றி சொல்கிறார் என்று தானே நினைத்திருப்பிர்கள் ஆனால் நீங்களும் நானும் நினைத்தது போல் அவர் நாய் குட்டி பற்றி பேசவில்லை, அவர் தன் வீட்டு கொல்லைப்புற தோட்டத்தில் வளர்க்கும் இரண்டு புலிகளை பற்றி தான் பேசுகிறார். சேபர் என்ற அறுநூறு எல் பி எடையுள்ள பெங்கால் வெள்ளை ஆண் புலியையும், ஜன்டா என்ற நானூறு எல் பி எடையுள்ள பெங்கால் பெண் புலி ஒன்றையும் அவைகள் குட்டியாக இருந்த காலத்திலிருந்து வளர்த்து பராமரித்து வருகிறார்.


புலிகளோடு பழகுவது என்றால் எல்லோருக்கும் மனதில் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்யும் ஆனால் இவரிடம் புலி வளர்க்க தன்னார்வலராக சேர்ந்திருக்கும் கேரி என்ற பெண்ணுக்கும் ஜேனிஸ் ஹேலி போல் புலிகளிடத்தில் பழகுவதில் எந்த அச்சமும் இல்லை. சில சமயம் சேபர் என் கையை வாயால் கவ்வி கொண்டு கூண்டு முழுவதும் பிடித்து இழுத்து செல்லும் ஆனால் எனக்கு தெரியும் அவைகளுக்கு இது ஒரு விளையாட்டு, அதிலும் சேபர் இரண்டு வார கால குட்டியாக இருக்கும் போதிலிருந்து என்னிடம் நன்றாக பழகி விட்டான்.

 இப்போது ஐம்பத்தி ஏழு வயதாகும் ஜேனிஸ்க்கும் அவர் கணவர் டேவிட்டிற்க்கும் ஆறு வயதாகும் சேபரையும், பனிரெண்டு வயதாகும் ஜன்டாவையும் பார்த்து கொள்வதே முழு நேர வேலையாய் இருக்கிறது. புலிகளை வீட்டின் கொல்லைப்புற தோட்டத்தில் வளர்ப்பது என்றால் பக்கத்து வீட்டில். தெருவில் இருப்பவர்கள் எதிர்க்காமல் இருப்பார்களா? ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் புலிகளுடன் செலவிடும் ஜேனிஸ் இரவில் அவைகளை உறங்க வைத்த பிறகு தானும் சில மணி நேரம் ஓய்வு எடுக்கிறார். ஆளை கொல்லும் புலிகளை கூட அன்பினால் கட்டி போட்டு விட முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜேனிஸ்.